Ad Banner
Ad Banner
 பொது

பாகான் டத்தோ: இந்திய மாணவர்களுக்கு 180,000 ரிங்கிட் மதிப்பிலான உதவிகள்

28/02/2026 04:23 PM

பாகான் டத்தோ, 28 பிப்ரவரி (பெர்னாமா) -- பேராக், பாகான் டத்தோவில் வசித்து வரும், சுமார் ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள கல்வி சார்ந்த உதவிகள் வழங்கப்பட்டன.

கடந்த 1982-ஆம் ஆண்டு பாகான் டத்தோ தொகுதியின் அம்னோ இளைஞர் பிரிவு தலைவராக பதவியேற்றதிலிருந்து தாம் கல்விக்கு முன்னுரிமை அளித்து வருவதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

''இனம், மதம், மொழியில் நான் வேறுபாடு காண்பதில்லை. தரத்தை மேம்படுத்த மாணவர்களின் கல்வியில் கவனம் செலுத்துகிறேன்,'' என்றார் அவர். 

வெள்ளிக்கிழமை பாகான் டத்தோ, உத்தான் மெலிந்தாங்கில், கல்வி சார்ந்த உதவிகளை வழங்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போது டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி  தெரிவித்தார். 

மேலும், இந்த உதவி மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பயனாக இருக்கும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]