Ad Banner
Ad Banner
 உலகம்

மலேசியா–இலங்கை விமான போக்குவரத்தில் FITSAIR புதிய உயர்வு

31/01/2026 04:01 PM

ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான், ஜனவரி 31 (பெர்னாமா) -- இலங்கையின் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமும் மற்றும் தனியார் சொந்தமான முதல் அனைத்துலக விமான நிறுவனமான FitsAir மார்ச் மாத இறுதிக்குள் மலேசியாவுக்கான தனது வாராந்திர விமானப் பயணத்தை மூன்று முறையிலிருந்து நான்காகத் திட்டமிட்டுள்ளது.

மலேசியாவில் தனது செயல்பாடுகளைத் தொடங்கிய ஒன்பது மாதங்களுக்குள் விமானப் பயணிகளின் எண்ணிக்கையை 60தில் இருந்து 80 விழுக்காட்டிற்கு உயர்த்தியதைத் தொடர்ந்து அதனை 85 முதல் 90 விழுக்காடு வரை அதிகரிக்க இலக்கு கொண்டுள்ளதாக Fits Aviation நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி முஹமட் நஜாத் சுருபா தெரிவித்தார் .

''தற்போது நாங்கள் மலேசியாவிற்கு வாரத்திற்கு மூன்று முறை விமான சேவையை மேற்கொண்டுள்ளோம். இதை நான்கு முறையாக அதிகரிக்க விரும்புகிறோம். மார்ச் மாத இறுதியில் தொடங்கும் இந்த கோடைக் காலத்திலிருந்து வாரத்திற்கு நான்கு விமான சேவையாக அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும், அக்டோபர் இறுதியில் தொடங்கும் அடுத்த குளிர்காலத்தில் தினசரி விமான சேவையைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டில் தினமும் இரு முறை சேவையாக மாற்றுவது எங்களின் இலக்காகும். இதுவே மலேசிய பயண சந்தையைப் பற்றிய எங்களின் திட்டமாகும்'', என்றார் நஜாத் சுருபா.

FitsAir கோலாலம்பூர்–கொழும்பு-லாஹோர் வழித்தடத்திற்கான விமான பயண டிக்கெட் விற்பனையைப் பிப்ரவரி மாத தொடக்கத்தில் ஆரம்பிக்க உள்ளது.

இந்த வழித்தடத்திற்கான விமான சேவை 2026 மார்ச் மாத இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், பாகிஸ்தான் மற்றும் மலேசியாவுக்கு இடையிலான விமான இணைப்புகளில் குறிப்பிடத்தக்க இடைவெளி இருப்பதைச் சுட்டிக்காட்டிய FitsAir லாஹோருடன் விமான சேவையை இணைக்க 85 விழுக்காட்டை விட அதிகமான பயணிகள் விகிதத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து அதிகரித்து வரும் பயணத் தேவையைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கொழும்பு வழியாகக் கோலாலம்பூர், டெல்லி மற்றும் அகமதாபாத் நகரங்களுடன் இணைக்கும் விமான சேவையைத் தொடங்கவும் FitsAir திட்டமிட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)