Ad Banner
Ad Banner
 விளையாட்டு

மலேசிய சூப்பர் லீக்; பிடிஆர்எம் - கே.எல் சிட்டி சமநிலை

31/01/2026 05:17 PM

சிலாங்கூர், ஜனவரி 31 (பெர்னாமா) -- மலேசிய சூப்பர் லீக் கிண்ணம்

நேற்றிரவு, செலாயாங் நகராண்மை கழக அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பிடிஆர்எம் ஃப்சி 1-1 என்று கே.எல் சிட்டி ஃப்சி உடன் சமன் கண்டது.

இரு அணிகளும் கோல் போடுவதில் பல முயற்சிகள் மேற்கொண்டன

அதில், கே.எல் சிட்டி முதலாம் பாதியின் 12-வது நிமிடத்தில் கோல் போட்டது.,

பிடிஆர்எம் ஃப்சி-யின் ஒரே கோல் இரண்டாம் பாதி ஆட்டத்தின் 63-வது நிமிடத்தில் அடிக்கப்பட்டது.

இந்த முடிவின் வழி, லீக் பட்டியலில் கே.எல் சிட்டி  30 புள்ளிகளோடு மூன்றாம் இடம் வகிக்கும் வேளையில், பிடிஆர்எம் ஏழு புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)