Ad Banner
 பொது

ஆசியான் தலைமை முடிந்தும் தாய்லாந்து-கம்போடியாவும் மலேசியாவுடன் தொடர்பில் உள்ளது

20/01/2026 06:56 PM

ஜாலான் பார்லிமன், ஜனவரி 20 (பெர்னாமா) -- ஆசியானுக்குத் தலைமையேற்றதால் மட்டும் தாய்லாந்து-கம்போடியா மோதல்களுக்குத் தீர்வுக் காணும் ஒருங்கிணைப்பாளராக மலேசியா தேர்ந்தெடுக்கப்படவில்லை.

மாறாக, இரு நாடுகளும் இந்த உறுதிப்பாட்டில் திருப்தி கொண்டிருக்கும் நிலையில் ஆசியான் தலைவர் பதவியின் பொறுப்புகள் முடிந்திருந்த போதிலும் அதே நோக்கத்திற்காக மலேசியாவுடன் தொடர்பு இன்னும் தொடர்வதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்தார்.

எந்தவொரு ஆசியான் உறுப்பு நாட்டின் பிரச்சனைகள், சவால்கள் மற்றும் மோதல்களுக்குத் தீர்வு காண்பதில் ஆசியான்-மலேசியா தோல்வியடைந்ததாகக் கூறுவது தவறு என்று டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் சுட்டிக் காட்டினார்.

''ஆசியான் வட்டார பிரச்சனைகளைத் தீர்வுக் காண தவறிவிட்டது என்றுக் கூறுவது துல்லியமானது இல்லை என்று நான் கருதுகிறேன். ஏனென்றால் கம்போடியாவிற்கும் தாய்லாந்திற்கும் பிரச்சனையை உதாரணமாக எடுத்துக் கொண்டால் அதனை நாம் அதனை தீர்க முடியும். மேலும் இரு நாடுகளும் மலேசியாவை விரும்புவதால் மலேசியா ஒரு வசதியாளராகச் செயல்பட முடிந்தது'', என்றார் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான்.

ஆசியானில் இணைய விரும்பும் எந்தவொரு புதிய நாடும் தென்கிழக்கு ஆசியாவில் நட்பு மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதோடு ஐந்து அனுமதி ஒருமித்த கருத்துகள் குறித்து தமது நிலைப்பாட்டைத் தெரிவிப்பதிலும் ஆசியான் உறுதியாக உள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)