மகாராஷ்டிரா, ஜனவரி 29 (பெர்னாமா) -- இந்தியா, மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜித் பவாரின் சிறிய ரக விமானம் தீப்பிடித்து எரிந்ததில் அதிலிருந்த ஐவர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் முதலமைச்சரும் அடங்குவார் என்று விமான ஒழுங்குமுறை ஆணையம் உறுதிப்படுத்தியது.
உயர்மட்ட அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த பவார் ஊராட்சி தேர்தல் பிரச்சாரத்திற்காக மும்பையிலிருந்து தனது சொந்த ஊருக்குச் சென்றுக் கொண்டிருந்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இவ்விபத்தில் அவரின் இரண்டு ஊழியர்களும் இரண்டு விமானப் பணியாளர்களும் அந்த VSR Ventures நிர்வகிப்பிலான லேஅர்ஜெட் 45 விமானத்தில் இருந்ததாக பொது விமானப் போக்குவரத்து வாரியம் தெரிவித்துள்ளது.
விமானம் பாராமதி நகரை நெருங்கும் போது விபத்துக்குள்ளான நிலையில் இவ்விபத்திற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்று வி.சி.ஆர் வெஞ்சர்ஸ் இயக்குநர் வி.கே சிங்க் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)