கொலம்பியா , ஜனவரி 29 (பெர்னாமா) -- வடகிழக்கு கொலம்பியாவில் நேற்று நிகழ்ந்த விமான விபத்தில் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் உட்பட விமானத்தில் இருந்த 15 பேரும் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் 13 பேர் பயணிகள்.
மேலும் இருவர் விமானப் பணியாளர்கள் என்று அரசாங்க விமான நிறுவனமான சாத்தேனாவின் தலைவர் ஒஸ்கார் சுலுஹாகா தெரிவித்தார்.
இவ்விமானம், குக்குத்தாவிலிருந்து ஒக்கானாவிற்குச் செல்ல புறப்பட்ட 12 நிமிடங்களுக்குப் பிறகு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் தொடர்பை இழந்தது.
இவ்விமானத்தில், சட்டமன்ற உறுப்பினர்டயோஜெனெஸ் குயின்டெரோவும் காங்கிரஸ் வேட்பாளர் கார்லஸ் செல்சேடோ இருந்ததாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் வெளியிட்ட பயணிகள் பட்டியல் காட்டுகின்றது.
விமான நடவடிக்கை, வானிலை போன்ற மலைப்பாங்கான இடத்தின் தாக்கம் ஆகியவை அடிப்படையில் இவ்விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)