Ad Banner
 உலகம்

இந்தியாவுடனான சுயேட்சை வாணிப ஒப்பந்தம்; ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பாராட்டு

28/01/2026 02:15 PM

புது டெல்லி, ஜனவரி 28 (பெர்னாமா) -- பொருளாதார மற்றும் வியூக உறவுகளை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்தியாவுடனான சுயேட்சை வாணிப ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பாராட்டியுள்ளனர்.

ஐரோப்பிய மன்றத் தலைவர் அன்டோனியோ கோஸ்டாவும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வோன் டெர் லேயனும் செவ்வாய்க்கிழமை புது டெல்லியில் இந்திய அதிபர் திரௌபதி முர்முவுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைக் கொண்டாடினர்.

200 கோடி மக்களை உள்ளடக்கிய இந்த ஒப்பந்தம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு எட்டப்பட்டுள்ளது.

இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 விழுக்காடு மற்றும் உலக வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் பெரும்பாலான பொருட்களின் மீதான வரிகளைக் குறைப்பது இருவழி வர்த்தகத்தை அதிகரிப்பது, ஒழுங்குமுறை தடைகளைத் தளர்த்துவது, பொருட்கள் மற்றும் சேவைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் வழி ஐரோப்பிய ஒன்றிய ஏற்றுமதிகளில் 96.6 விழுக்காடு மீதான வரிகளை இந்தியா குறைக்கும் வேளையில் இந்திய ஏற்றுமதிகளில் கிட்டத்தட்ட 99 விழுக்காட்டிற்கு ஐரோப்பிய ஒன்றியம் அதை ஈடு செய்யும்.

இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்குப் பல மாதங்கள் ஆகலாம்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)