புயலினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா நிதியுதவி
கொழும்பு, டிசம்பர் 24 (பெர்னாமா) -- டிட்வா புயலினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நிவாரண மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக இந்தியா 4050 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
இலங்கைக்கு இரண்டு நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துடன் ஆற்றிய உரையில் இந்நிதியுதவி குறித்த அறிவிப்பைச் செய்தார்.
இந்த உதவி தொகை ரயில் நிலையம், சாலை மற்றும் பாலங்களை மறுசீரமைப்பதற்கும் சேதமடைந்த வீடுகளை மீண்டும் கட்டுவதற்கும் உதவும் என்று ஜெய்சங்கர் கூறினார்.
இந்தியா வழங்கும் இந்த நிதியுதவியில் 3,150 கோடி ரூபாய் சலுகை கடன் என்றும் 900 கோடி ரூபாய் மானியம் என்றும் அவர் கூறினார்.
இலங்கையில் டிட்வா புயலாலினால் 410 கோடி அமெரிக்க டாலர் மதிப்புடைய சேதம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி கணித்துள்ளது.
கடந்த நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட இப்புயலால் நாட்டில் 643 பேர் உயிரிழந்தனர்.
அதோடு, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள், சாலைகள், பாலங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)