டென்னசி, 25 ஜனவரி (பெர்னாமா) -- அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல் தாக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டிருப்பதால், அங்கே பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவின் தெற்கு பகுதி தொடங்கி வடகிழக்கு வரை பனிப்புயல் தாக்கக்கூடும் என்றும் வாஷிங்டன் முதல் நியூயார்க் வரை சுமார் 30 சென்டிமீட்டர் அளவிலான பனி பொழியும் என்றும் அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
பனிப்புயல் சில தினங்களுக்கு நீடிக்கும் என்பதால் வாஷிங்டன் டிசி உள்ளிட்ட 18 இடங்களில் வானிலை அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சிக்காககோ உட்பட மத்திய மேற்கு நகரங்களில் உள்ள பள்ளி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பனிப்புயலால் சுமார் 20 கோடி மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
பாதுகாப்பு கருதிப் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆர்க்டிக் வெடிப்பால் ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் கடுமையான பனிப்புயலைச் சந்தித்து வருகின்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)