Ad Banner
 பொது

கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் தைப்பூச நேர்த்திக் கடன்களைச் செலுத்திய பக்தர்கள்

25/01/2026 08:41 PM

ஈப்போ, 25 ஜனவரி (பெர்னாமா) -- பேராக், ஈப்போவில் உள்ள கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் இன்று அதிகாலை தொடங்கி பக்தர்கள் காணிக்கை செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

பக்தர்கள் இடையூறுகள் இன்றி நேர்த்திக் கடன்களைச் செலுத்தத் தகுந்த நடவடிக்கைகளும் முன்னேற்பாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டை விட இவ்வாண்டு அதிகமான பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்களும் பொது மக்களும் பொறுமையும் சமய நெறியைக் கடைப்பிடிக்க வேண்டும் ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் தலைவர் ஆர். சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.


விடுமுறை நாள் என்பதால் அதிகமான கூட்டம் வரலாம். எனவே, பொது மக்கள் பொறுமையை கடைப்பிடித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்த வேண்டும். அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம். பக்தர்கள் இப்போதே காவடிகள் எடுக்க தொடங்கிவிட்டனர்.

மேலும், தைப்பூசத்தின் போது, பொது மக்கள் தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இதனிடையே, தைப்பூசத்திற்கு முதல் நாள் புந்தோங்கில் உள்ள அருள்மிகு ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து காலை மணி 6-க்கு இரதம் புறப்பட்டு, காலை மணி 11 அளவில் கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)