Ad Banner
 விளையாட்டு

ஆஸ்திரேலிய பொது டென்னிஸ்; காலிறுதியில் சபலென்கா

25/01/2026 06:16 PM

மெல்பர்ன், 25 ஜனவரி (பெர்னாமா) -- ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்திற்கு, உலகின் முதல் நிலை வீராங்கனை அரினா சபலென்கா முன்னேறியுள்ளார்.

இன்று நடைபெற்ற நான்காம் சுற்று ஆட்டத்தில் சபலென்கா, கனடாவின் இளம் விளையாட்டாளர் விக்டோரியா எம்போகோவுடன் மோதினார்.

ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியின் கிண்ணத்தை இரு முறை வென்றுள்ள சபலென்கா, இவ்வாட்டத்தை எளிதாக எதிர்கொண்டார்.

முதல் செட்டில் 6-1 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்ற சபலென்கா, இரண்டாம் செட்டை 7-6 என்று கைப்பற்றினார்.

காலிறுதி ஆட்டத்தில், அவர் அமெரிக்க விளையாட்டாளருடன் மோதவுள்ளார்.

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில், உலகின் முதல் நிலை ஆட்டக்காரர் கார்லோஸ் அல்கராஸ் காலிறுதி ஆட்டத்திற்குத் தேர்வாகினார்.

இன்று நடைபெற்ற நான்காம் சுற்று ஆட்டத்தில், அவர் அமெரிக்காவின் டாமி பாலுடன் விளையாடினார்.

இந்த ஆட்டத்தில் 7-6, 6-4, 7-5 என்ற நிலையில் அல்கராஸ் வெற்றி பெற்றார்.

மூன்றாவது முறையாகக் காலிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியிருக்கும் அல்கராஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினொருடன்  விளையாடவுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)