Ad Banner
 பொது

தைப்பூசத்தில் இடையூறு விளைவிப்போர் மீது கடுமை நடடிக்கை - போலீஸ் எச்சரிக்கை  

25/01/2026 06:47 PM

பத்துமலை, ஜனவரி 25 (பெர்னாமா) -- தைப்பூச காலகட்டத்தில் லட்சக் கணக்கானோர் திரளும் பத்துமலையில் கட்டொழுங்கை நிலை நிறுத்துவதற்காக நிர்வாகத்தின் துணையுடன் அரச மலேசிய போலீஸ் படை பி.டி.ஆர்.எம்  பல்வேறு நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சஸாலி பின் ஹஜி அடாம் தெரிவித்தார்.

"குண்டர் கும்பலை அடையாளப்படுத்தும் எவ்வகை குறியீடுகளையும் யாரும் வெளிப்படுத்த வேண்டாம் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். பொதுமக்களுக்கு இடையூறு அல்லது முகசுளிப்பை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடும் பக்தர்கள் உள்ளிட்ட தரப்பினர் மீது போலீஸ் கடுமையான சட்டநடவடிக்கை மேற்கொள்ளும். மேலும், இக்காலகட்டத்தில் தவறான அல்லது ஆபத்தை விளைவிக்கும் கருவிகளையும் யாரும் கொண்டுவரவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது," என்றார் அவர்.

அதேவேளையில் கோலாலம்பூரிலிருந்து புறப்படும் ரதம் பத்துமலை திருத்தலத்திற்கு பாதுகாப்பாக வந்து சேரும் வரையில் சுமார் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் அமர்த்தப்படுவர் என்றும் அவர் கூறினார்.

இன்று பத்துமலை வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில்ஏசிபி சஸாலி பின் ஹஜி அடாம் அவ்வாறு தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)