மிசிசிப்பி, ஜனவரி 11 (பெர்னாமா) -- அமெரிக்கா, மிசிசிப்பி மாநிலத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அறுவர் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அலபாமா மாநில எல்லை அருகிலுள்ள வெஸ்ட் பாயிண்ட் எனும் நகரில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.
இத்தாக்குதலில் துப்பாக்கிச் சூடுபட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்ததாக அதிகாரி எடி ஸ்காட் தெரிவித்தார்.
மூன்று வெவ்வேறு இடங்களில் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாக அவர் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இது தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இனி இது மக்களுக்கு எந்தவொரு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)