Ad Banner
 பொது

ஸ்கந்த வேள்வி; ஶ்ரீ முருகன் நிலைய ஏற்பாட்டில் புதிய திட்டம்

11/01/2026 07:42 PM

கோலாலம்பூர், ஜனவரி 11 (பெர்னாமா) -- இந்திய மாணவர்கள் கல்வி துறையில் சிறந்து விளங்க, ஸ்கந்த வேள்வி எனும் புதிய திட்டத்தை ஶ்ரீ முருகன் நிலையம் இன்று அறிமுகப்படுத்தியது.

பாடங்கள் தொடர்பான குறிப்புகள், தேர்வுக்கான முக்கிய கேள்விகள் மற்றும் மாணவர்களின் ஆழ்ந்த புரிதலையும் சிந்தனைத் திறனையும் வளர்க்கும் கல்வி உள்ளடக்கங்கள் கொண்ட இலக்கவியல் கருவியாக ஸ்கந்த வேள்வி செயல்படும் என்று ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இயக்குநர் சுரேன் கந்தா தெரிவித்தார்

''ஸ்கந்த திட்டம் மிக முக்கியமனது, இது மாணவர்களுக்கு ஒரு தன்முனைப்பை தரும். நாங்கள் தேசிய ஒருமைப்பாட்டு துறையுடன் ஒன்றிணைந்து மாணவர்களுக்கு பொது அறிவு, நிறைவான புரிதல், ஏற்றுக்கொள்ளும் மனட்பான்மையை அளிக்க நினைகின்றோம். இவை அனைத்தையும் மலேசிய இந்தியர்கள் பின்பற்றினால் இது நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும்.''

அதோடு, எதிர்காலத்தில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குச் செல்ல வேண்டும் என்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த ஸ்கந்த வேள்வி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தேசிய தமிழ் தலைமையாசிரியர் மன்றத் தலைவர் பழனி சுப்பையா தெரிவித்தார்.

''இந்த ஸ்கந்த வேள்வி திட்டம் 528 தமிழ் பள்ளிகளுக்கு கொண்டு சேரிக்கும் ஒரு திட்டமாக அமைகின்றது. எதிர்காலத்தில் தமிழ் பள்ளி மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றடைய வேண்டும் என்பதே இந்த திட்டட்தின் நோக்கம். இதனை நினைவாக்கும் முயற்சியில் தேசிய தமிழ் தலைமையாசிரியர் மன்றமும் ஒரு ஊண்டுகோளாக அமைவதில் பெருமிதம் கொள்கிறோம்.''

இன்று காலை மணி எட்டு-க்கு தொடங்கிய இந்நிகழ்ச்சியில் சுமார் 800 பேர் கலந்து கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)