Ad Banner
Ad Banner
 உலகம்

தைபேயில் இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கியதால் நால்வர் பலி

20/12/2025 06:38 PM

சிரியா, டிசம்பர் 20 (பெர்னாமா) -- சிரியாவில் உள்ள ஐஎஸ் போராளிகள் மீது அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் நிர்வாகம் நேற்று இராணுவத் தாக்குதல்களைத் தொடங்கியது.

ஒரு வாரத்திற்கு முன்பு அமெரிக்காவின் இரு இராணுவ வீரர்களையும் அமெரிக்க மொழிபெயர்ப்பாளரையும் ஐஎஸ் போராளிகள் கொன்ற நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க இராணுவம் இந்த தாக்குதலை தொடுத்துள்ளது.

மத்திய சிரியா முழுவதும் ஐஎஸ் உள்கட்டமைப்பு மற்றும் ஆயுதங்களைக் கொண்டிருக்கும் 70 இலக்குகளை அமெரிக்க இராணுவம் தாக்கி வருகிறது.

ஐஎஸ் அமைப்புக்குச் சொந்தமான ஆயுதத் தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட "பெரிய அளவிலான" தாக்குதல் என்று ஒரு அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஐஎஸ் போராளிகளின் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தாக்குதல்கள் தொடரப்படும் என்று அவர் கூறினார்.

ஐஎஸ் அமைப்பின் முக்கியத் தலைவர் ஒருவரும் போராளிகள் பலரும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இத்தாக்குதல் குறித்து ஐஎஸ் அமைப்பு இதுவரை எந்தவொருக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)