Ad Banner
 பொது

சாலை விபத்தில் மூன்றாம் படிவ மாணவர் பலி

11/01/2026 05:19 PM

கோலா திரெங்கானு, ஜனவரி 11 (பெர்னாமா) -- கோலா திரெங்கானு, ஜலான் கெப்போங்கில் இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கிய மூன்றாம் படிவ மாணவர் உயிரிழந்தார்.

பாடாங் மிடின் தேசிய இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த நூர் ஹாசிமி நூர் ஹாஷிம் எனும் அம்மாணவர் பலத்த காயங்களுக்கு ஆளானதால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகக் கோலா திரெங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி அஸ்லி முஹமட் நூர் தெரிவித்தார்.

ஹோண்டா EX5 ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த அம்மாணவரை பெரோடுவா ஆக்சியா ரக கார் மோதியது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக எசிபி அஸ்லி முஹமட் நூர் கூறினார்.

எதிர் திசையில் பயணித்த அக்கார் மோதியே இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

காலை மணி 7.55க்குப் பொதுமக்களிடம் இருந்து போலீசுக்கு அழைப்பு கிடைத்ததாகதாக எசிபி முஹமட் நூர் தெரிவித்தார்.

இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட நூர் ஹாசிமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில் காரின் ஓட்டுநருக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என்றும் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.

1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் செக்‌ஷன் 41(1)இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)