கோலாலம்பூர், டிசம்பர் 23 (பெர்னாமா) -- மலேசியாவின் வலுவான இலக்கவியல் உள்கட்டமைப்பு, அரசியல் நிலைத்தன்மை மற்றும் அரசாங்கக் கொள்கைகள் ஆகியவை தொழில்நுட்பம் மற்றும் இலக்கவியல் முதலீட்டை நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளன.
எதிர்கால வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை தேசிய இலக்கவியல் இணைப்புத் திட்டம் JENDELA உருவாக்கியுள்ள நிலையில் இதன் வழி தரவு மையங்கள் மற்றும் இதர இலக்கவியல் முதலீடுகளுக்கான இலக்காகவும் மலேசியா திகழ்வதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
''ஏனென்றால், ஜெண்டேலாவின் முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டம் அமல்படுத்தப்பட்டதால், தேசிய இணைய இணைப்பு திட்டம் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளது. இதற்கான செலவு அதிகமாக இருந்தாலும் அதனை மக்களுக்கான நீண்டகால முதலீடாகவே அரசாங்காம் பார்க்கிறது.'' என்றார் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில்
பெர்னாமா தலைமைச் செய்தி ஆசிரியர்அருள் ராஜு துராஜ் ராஜ் தலைமையில் செய்தி சேவைக்கான இடைக்கால துணைத் தலைமை செய்தி ஆசிரியர் முஹமட் ஷுக்ரி இஷாக் பொருளாதார செய்தி சேவை நிர்வாக ஆசிரியர் எம். சரஸ்வதி ஆகியோர் நடத்திய பெர்னாமாவுடனான நேர்காணலில் ஃபஹ்மி அவ்வாறு கூறினார்.
மலேசியாவின் இலக்கவியல் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு 5G தொழில்நுட்பத்திற்கான மாற்றத்திற்கு நாட்டை தயார்படுத்துவதே 12-வது மலேசியத் திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட JENDELA திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)