Ad Banner
 பொது

இலக்கவியல் கண்காணிப்பை வலுப்படுத்த MYIKD உருவாக்கம்

26/01/2026 04:34 PM

ஜாலான் பார்லிமன், ஜனவரி 26 (பெர்னாமா) -- இலக்கவியல் உள்ளடக்கத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பை மேலும் விரிவாக வலுப்படுத்தும் முயற்சியாக MyIKD எனப்படும் மலேசியா இலக்கவியல் உள்ளடக்க குறியீட்டை இலக்கவியல் அமைச்சு உருவாக்கி வருகிறது.

MyIKD என்பது மையப்படுத்தப்பட்ட தரவுத்தளம் மட்டுமின்றி இந்நாட்டு மக்களிடையே நிலவும் இலக்கவியல் இடைவெளியை அளவிடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ தெரிவித்தார்.

''MyIKD மூலம் மக்களிடையே நிலவும் வசதி வாய்ப்புகள் அல்லது மலிவு விலை திறன் குறித்துக் குறிப்பாக அளவிடப்படும். இத்தரவுகள் எதிர்காலத்தில் அரசாங்கம் இன்னும் இலக்கு நோக்கிய திட்டங்களை வடிவமைக்கவும் இலக்கவியல் இடைவெளியைத் தொடர்ந்து கண்காணிக்கவும் உதவும்'', என்றார் கோபிந் சிங் டியோ.

மேலும், இலக்கவியல் பொருளாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள மேம்பாட்டின் அடிப்படையில் இலக்கவியல் மயமாக்கல் முயற்சிகள் சமூக சமத்துவமின்மையை அதிகரிக்காது என்பதை உறுதி செய்ய அமைச்சு உறுதிபூண்டுள்ளது.

இந்நிலையில் கொள்கை அமலாக்கத்தில் இலக்கவியல் உள்ளடக்கிய தன்மையை ஒரு முக்கிய கொள்கையாக மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோபிந் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)