சமுட் பிரகான், டிசம்பர் 13 (பெர்னாமா) -- தாய்லாந்து சீ விளையாட்டுப் போட்டியில், நாட்டின் தேசிய பனிச்சறுக்கு வீரர் பாங் ஸி ஸிங் மலேசியாவுக்கான 11வது தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார்.
சமுட் பிரகான் பனிச்சறுக்குப் பயிற்சி மையத்தில் இன்று நடைபெற்ற ஆடவர் பிரிவில் மொத்தம் 157.22 புள்ளிகளோடு முதலிடம் பிடித்து பாங் ஸி ஸிங் தங்கம் வென்றார்.
பிலிப்பைன்ஸ் போட்டியாளருடன் கடும் போட்டியை எதிர்கொண்ட பாங் ஸி ஸிங் தமது சிறந்த திறனை வெளிப்படுத்தி முதலிடத்தைக் கைப்பற்றினார்.
137.98 புள்ளிகளுடன் பிராண்டன் ஜேம்ஸ் பால்டோஸ் வெள்ளிப் பதக்கம் வென்ற வேளையில் மூன்றாவது இடத்தில் வெண்கலத்தைத் தாய்லாந்து வென்றது.
அதே போட்டியில் பங்கேற்ற நாட்டின் மற்றொரு தேசிய பனிச்சறுக்கு வீரரான லோ சுன் ஹாங் 91.12 புள்ளிகளுடன் ஏழாம் இடத்தைப் பிடித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)