Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

சீ விளையாட்டுப் போட்டியில் நான்கு தங்கங்களை வெல்ல பி.ஏ.எம் இலக்கு

04/12/2025 04:51 PM

கோலாலம்பூர், டிசம்பர் 04 (பெர்னாமா) -- டிசம்பர் 9 முதல் 20ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் தாய்லாந்து சீ விளையாட்டுப் போட்டியில் நான்கு தங்கப் பதக்கங்களை வெல்ல மலேசிய பூப்பந்து சங்கம் BAM இலக்கு நிர்ணயித்துள்ளது.

தற்போதைய தரவரிசை மற்றும் அடைவுநிலை அடிப்படையில் தேசிய பூப்பந்து விளையாட்டாளர்கள் சிறந்த சாதனையை அடைய முடியும் என்று அச்சங்கத்தின் தலைவர் தெங்கு சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தேசிய ஆடவர் இரட்டையர் ஆரோன் சியா - சோ வூய் யிக் தேசிய மகளிர் இரட்டையர் பெர்லி தான்-எம் தினா மற்றும் கலப்பு இரட்டையர் சென் தாங் ஜீ-தோ ஈ வெய் ஆகியோர் தங்கப் பதக்கத்தை வெல்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

''பயிற்சியாளர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் எதிர்பார்ப்பு என்னவென்று உங்களுக்குத் தெரியும். தரவரிசையைப் பார்த்தால், கலப்பு இரட்டையர், ஆடவர் இரட்டையர், மகளிர் இரட்டையர் மற்றும் குழு பிரிவில் இருக்கும். ஆடவர் குழு பிரிவு என்று நான் நினைக்கிறேன். எனவே, தரவரிசை மற்றும் கடந்த ஓர் ஆண்டு அடைவுநிலையைப் பார்த்தால் எதிர்பார்ப்பு அவர்களிடம் வைக்கப்பட்டுள்ளது,'' என்றார் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ்.

நாட்டின் சிறந்த விளையாட்டு வீரர்களைக் களமிறக்கும் முடிவினால் சிறந்த அடைவுநிலையை எட்ட இயலும் என்று அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)