Ad Banner
Ad Banner
Ad Banner
 அரசியல்

29 சட்டமன்றங்களை வென்று சபாவில் மீண்டும் ஆட்சி அமைக்கின்றது  ஜி.ஆர்.எஸ்

30/11/2025 01:55 PM

கோத்தா கினபாலு, நவம்பர் 30 (பெர்னாமா) -- 17-வது சபா மாநிலத் தேர்தலில் 29 சட்டமன்றங்களைக் கைப்பற்றி சபா மக்கள் கூட்டணி, ஜி.ஆர்.எஸ் மீண்டும் அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கின்றது. 

அதிக தொகுதிகளில் ஜி.ஆர்.எஸ் முதல் இடம் வென்றிருக்கும் வேளையில்,  இரண்டாம் இடத்தில் வாரிசான் கட்சி 25 சட்டமன்ற தொகுதிகளையும் மூன்றாம் இடத்தில்  தேசிய முன்னணி ஆறு இடங்களையும் வென்றிருப்பதாக தேர்தல் ஆணையர் டத்தோ ஶ்ரீ ரம்லான் ஹருன்  தெரிவித்தார். 

அதனை அடுத்து, சுயேட்சை வேட்பாளர் நான்காவது நிலையில் இடம்பெறிருக்கும் வேளையில், KINABALU PROGRESIF BERSATU கட்சியான UPKO-விற்கு மூன்று தொகுதிகளும், Solidariti Tanah Airku கட்சியான STAR இரண்டு தொகுதிகளையும் வென்றதாக Dடத்தோ ஶ்ரீ ரம்லான் ஹருன்  தெரிவித்தார். 

இத்தேர்தலில் போட்டியிட்ட பெரிக்காத்தான் நேஷனல், சமூக ஜனநாயக நல்வாழ்வுக் கட்சி KDM மற்றும் நம்பிக்கைக் கூட்டணி ஆகியவை தலா ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. 

இம்முறை நடைபெற்ற மாநிலத் தேர்தலில் 11 லட்சத்து 48 ஆயிரத்து 476 பேர் அல்லது 64.35 விழுக்காட்டினர் வாக்களித்திருந்ததாகவும் அவர் தகவல் தெரிவித்தார். 

"இன்று வாக்களித்தவர்கள், முன்னதாக வாக்காளித்தவர்கள் மற்றும் அஞ்சல் வாக்காளர்கள் ஆகியோர் இந்த எண்ணிக்கையில் அடங்குவர்," என்றார் அவர்.

இதனிடையே, வெற்றி பெற்ற ஜி.ஆர்.எஸ், இதர கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுடன் இணைந்து எளிய பெரும்பான்மையுடன் மாநில அரசாங்கத்தை அமைப்பதில் மீண்டும் அத்தியாயம் படைத்துள்ளது.

எளிய பெரும்பான்மையில், சபா மாநில அரசாங்கத்தை அமைப்பதற்கு 73 மொத்த சட்டமன்றத் தொகுதிகளில் 37 இடங்களை வெல்வது போதுமானது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)