Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

சபாவின் புதிய அமைச்சரவையினர் பதவியேற்றனர்

01/12/2025 05:55 PM

கோத்தா கினபாலு, டிசம்பர் 01 (பெர்னாமா) -- 17வது மாநிலத் தேர்தலுக்குப் பிறகு சபாவின் புதிய அமைச்சரவையினர் இன்று பதவியேற்றனர்.

பிற்பகல் மணி 3.36 அளவில் இஸ்தானா ஶ்ரீ கினபாலுவில் மாநில ஆளுநர் துன் மூசா அமன் முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்பு சடங்கில் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இன்று நடைபெற்ற சடங்கில் மூன்று துணை முதலமைச்சர்களும் ஏழு அமைச்சர்களும் பதவியேற்றனர்.

சபா மக்கள் கூட்டணி ஜி.ஆர்.எஸ்ஸைச் சேர்ந்த 7 சட்டமன்ற உறுப்பினர்களும் நம்பிக்கைக் கூட்டணி KINABALU PROGRESIF BERSATU கட்சி, உப்கோ மற்றும் தேசிய முன்னணியைச் சேர்ந்த தலா ஒருவரும் இன்று பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

ஜி.ஆர்.எஸ்ஸைச் சேர்ந்த டத்தோ ஶ்ரீ மாசிடி மஞ்சுன் மற்றும் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஜோச்சிம் குன்சலம், உப்கோ தலைவர் டத்தோ எவன் பெனடிக் ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றனர்.

புதிய சபா அமைச்சரவை உறுப்பினர்களின் பதவியேற்பு சடங்கில், சபா முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர் மற்றும் சபா மற்றும் சரவாக் தலைமை நீதிபதி டத்தோ அசிசா நவாவி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)