கே.எல்.சி.சி, 25 அக்டோபர் (பெர்னாமா) -- ஆசியான் தொடர்ந்து பேச்சாளர்களாகச் செயல்பட வேண்டும் மாறாகப் பேசும் பொருளாக அல்ல.
உலக அரசியலில் பதற்றம் தொடரும் நிலையில் இது வரவிருக்கும் நிச்சயமற்ற ஆண்டுகளில் ஆசியானின் மிக முக்கியமான பணியாக இருக்கும் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் கூறினார்.
நாம் இணைந்து வழங்கிய குரல் மற்றும் அதனை தொடர்ந்து வளர்ப்போம். அது உலகையே மாற்றும் ஒன்று. இதை நான் உறுதியாக நம்புகிறேன்,'' என்று டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்தார்.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற 47ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கான வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போது டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் அவ்வாறு குறிப்பிட்டார்.
அனைத்துலக நிலப்பரப்பில் ஒருமித்த கருத்துகளை விட போட்டியும் பேச்சுவார்த்தைக்குப் பதிலாகப் பிரிவினையும் அதிகரித்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், எதிர்காலத்தில் நிச்சயமற்ற தன்மைகள் ஏற்பட்டாலும் ஆசியான் அதனை "ஆசியான் வழியில்" எதிர்கொள்ளும் என்றும் கூட்டமைப்பின் வளமான பன்முகத்தன்மை மிகப் பெரிய பலமாக இருக்கும் என்றும் முஹமட் ஹசான் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)