புக்கிட் மெர்தாஜம், 26 அக்டோபர் (பெர்னாமா) -- பினாங்கில் தற்காலிக நிவாரண மையங்களாகச் செயல்பட்டு வரும் மூன்று பள்ளிகள் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பி.டி.பி.ஆர் எனப்படும் இல்லிருப்பு கற்றல் முறையைப் பின்பற்றும்.
லஹார் யூய் ஆரம்பப்பள்ளி செபராங் பிறை உத்தாராவில் உள்ள பாடங் மெனோரா ஆரம்ப்பள்ளி மற்றும் செபராங் பிறை தெங்காவில் உள்ள குவார் பெராஹு ஆரம்பப்பள்ளி ஆகியவை அம்மூன்று பள்ளிகளாகும்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களும் வீடுகளை இழந்தவர்களும் இம்மூன்று பள்ளிகளில் உள்ள பல வகுப்பறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகப் பினாங்கு மாநில கல்வி இயக்குநர் முஹமட் சியாடின் மாட் சஹாட் தெரிவித்தார்.
"வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நிர்வகிக்க நட்மா மற்றும் பிற நிறுவனங்களின் தேவை பி.பி.எஸ்-இல் வகுப்பறைகளைப் பயன்படுத்துவதும் இதில் அடங்கும். எனவே எங்கள் பள்ளிகளில் சில பி.டி.பி.ஆரை செயல்படுத்தும்," என்று முஹமட் சியாடின் மாட் சஹாட் குறிப்பிட்டார்.
1,786 மாணவர்களை உட்படுத்தி மூன்று பள்ளிகளிலும் இல்லிருப்பு கற்றம் முறை செயல்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
முதலாவது கல்வி துணை அமைச்சர் டத்தோ முகமட் அப்துல் ஹமீத்துடன் இன்று காலை பெர்மாத்தாங் பாசிர் இடைநிலைப்பள்ளியின் தற்காலிக நிவாரண மையத்தைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் முஹமட் சியாடின் அதனைத் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)