செப்பாங், அக்டோபர் 26 (பெர்னாமா) -- 47-வது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் அது தொடர்புடைய கூட்டங்களுடன் 20-வது கிழக்காசிய உச்சநிலை மாநாட்டிலும் கலந்து கொள்வதற்காக சீனப் பிரதமர் லீ கியாங் மலேசியா வந்து சேர்ந்தார்.
லீ மற்றும் இதர பேராளர்களை ஏற்றி வந்த சிறப்பு விமானம் இன்று மாலை மணி 4.17 அளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் பூங்கா ராயா வளாகத்தில் தரையிறங்கியது.
போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அவரை வரவேற்றார்.
அதையடுத்து, அரச மலேசிய இராணுவ படைப்பிரிவின் 28 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களைக் கொண்ட மரியாதை அணிவகுப்பை லீ பார்வையிட்டார்.
ஆசியான் உச்சநிலை மாநாடு வட்டார விரிவாக்க பொருளாதார கூட்டமைப்புக்கான தலைவர்கள் கூட்டம் ஆகியவற்றுடன் கிழக்காசிய உச்சநிலை மாநாட்டிலும் லீ கலந்து கொள்வார்.
அவரைத் தொடர்ந்து ரஷ்யாவின் துணைப் பிரதமரான அலெக்சி ஓவர்சங்க்கும் மாலை மணி ஐந்திற்கு மலேசியா வந்தடைந்தார்.
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)