Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 கம்போடிய வீரர்களை விடுவிப்பதாக தாய்லாந்து இணக்கம்

26/10/2025 07:38 PM

கோலாலம்பூர், அக்டோபர் 26 (பெர்னாமா) -- இரு அண்டை நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 கம்போடிய வீரர்களை தாய்லாந்து விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரப்பட்ட எல்லையின் நிலைத்தன்மை மற்றும் நம்பிக்கையின் அஸ்திவாரமாகவும் இந்த விடுவிப்பு உள்ளதாக தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் தெரிவித்தார்.

''தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 கம்போடிய வீரர்களை விடுவிக்கும் செயல்முறையை தாய்லாந்து உடனே தொடங்கும். நம்பிக்கை உட்பட நேர்மையாகச் செயல்படுவதும் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதும் பகிரப்பட் சமூக நல்வாழ்வைப் பாதுகாக்கும் தார்மீக பொறுப்பையும் நாம் கொண்டுள்ளோம்,'' என அனுடின் சார்ன்விரகுல் கூறினார்.

அதேபோல, இருநாடுகளுக்கு இடையிலான அமைதி ஒப்பந்தம் சிறந்த தீர்வு என்று பாராட்டிய கம்போடிய பிரதமர் ஹன் மானெட், இருதரப்பு நிலைத்தன்மை மற்றும் ஒத்துழைப்புக்கான முன்னேற்றம் ஒரு வரலாற்று பதிவு என்றும் வகைப்படுத்தினார்.

''கம்போடியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையிலான அமைதி நிலையை ஆதரிப்பதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீர்க்கமான தலைமைத்துவத்திற்கும் உறுதியான அர்ப்பணிப்புக்கும் அயராத முயற்சிக்கும் கம்போடிய மக்களின் சார்பாக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்,'' என ஹன் மானெட் கூறினார்.

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)