Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

சபா தேர்தல்: 9,500 போலீசார் பணிக்கு அமர்த்தப்படுவர்

10/10/2025 02:19 PM

கோலாலம்பூர், 10 அக்டோபர் (பெர்னாமா) -- சபா மாநிலத் தேர்தல் சுமூகமாகவும் சீராகவும் நடைபெறும் வகையில் அக்காலக்கட்டம் முழுவதும் அங்கு சுமார் 9,500 போலீஸ் அதிகாரிகளும் உறுப்பினர்களும் பணிக்கு அமர்த்தப்படவுள்ளனர். 

இதுவரை, 1,000-இல் இருந்து 1,500 வரையிலான கூடுதல் போலீஸ் உறுப்பினர்களின் சேவையை சபா மாநில போலீஸ் விண்ணப்பித்துள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார். 

அனைத்து பகுதிகளிலும் உள்ள வாக்களிப்பு மையங்களில் போலீஸ் அதிகாரிகளும் உறுப்பினர்களும் பணியில் இருப்பர் என்று டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் கூறினார். 

பொது அமைதியைப் பாதுகாப்பதற்கும் வாக்காளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியிலும் அவர்கள் ஈடுபடுவர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.  

''சபா மாநிலத் தேர்தலை எப்போது நடத்தலாம் என்று உறுதி செய்ய தேர்தல் ஆணையத்தின் முடிவுக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம். தற்போது பி.டி.ஆர்.எம் முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது. வாக்காளர்கள் மற்றும் வாக்களிப்பு இடங்களின் பாதுகாப்பு போலீசாரின் பொறுப்பாகும்,'' என்றார் அவர். 

இன்று, கோலாலம்பூர் போலீஸ் பயிற்சி மையம், PULAPOL-இல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.  

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]