பெங்காசி, 11 அக்டோபர் (பெர்னாமா) -- வெள்ளிக்கிழமை லிபியாவில் நடைபெற்ற நட்புமுறை ஆட்டத்தில், அட்லெடிகோ மாட்ரிட்டும், இன்டர் மிலனும் விளையாடின.
இவ்வாட்டம் 1-1 என்று சமநிலை கண்ட வேளையில், பினால்டி வழி 4-2 என்ற கோல்களில் அட்லெடிகோ வெற்றி பெற்றது.
சமநிலை கண்டாலும் ஐரோப்பாவின் பலம் பொருந்திய இரு கிளப்புகள் களமிறங்கிய இவ்வாட்டம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இரு அணிகளின் முக்கிய ஆட்டக்காரர்கள் தற்போது அவர்களின் தேசிய அணிகளுடன் விளையாடுவதால், இவ்வாட்டத்தில் புதிய முகங்கள் களமிறக்கப்பட்டன.
ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் கார்லோஸ் மார்ட்டின் வழி, அட்லெடிகோ முதல் கோலை அடித்தது.
அதன் பின்னர், 59-வது நிமிடத்தில் இன்டர் மிலன் ஆட்டத்தைச் சமப்படுத்தியது.
வெற்றியாளரை நிர்ணயிக்க ஆட்டம் பினால்டி வரை சென்ற நிலையில், அதில் 4-2 கோல்களில் அட்லெடிகோ வெற்றி பெற்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)