கோலாலம்பூர், 11 அக்டோபர் (பெர்னாமா) -- கல்வி கழகங்களில் ஏற்படும் எந்தவொரு பாலியல் வன்கொடுமை செயலுக்கும் கல்வி அமைச்சு சமரசம் காணாது.
அத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, யாருக்கும் பாதுகாப்பு அளிக்கப்படாது என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் உறுதியாக கூறினார்.
அண்மையில், மலாக்காவில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவி ஒருவருக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை குற்றம் மிகவும் வருத்தமளிக்கக் கூடியது என்று, இன்று தமது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில் ஃபட்லினா குறிப்பிட்டிருந்தார்.
மேலும், பள்ளி, மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் மாநில கல்வி துறை ஆகியோர் விசாரணை செயல்முறைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறும் அவர் உத்தரவிட்டார்.
அனைத்து கல்வி கழகங்களின் நிர்வாகத் தரப்பினர் தற்போது பயன்பாட்டில் உள்ள பாலியல் ஒழுங்கீன நிர்வகிப்பு வழிகாட்டிகளைப் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
அதோடு, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி கழகத்தைச் சேர்ந்த அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்யும்படியும் ஃபட்லினா வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)