Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

பாங்கி அருகே பேருந்து தடம் புரண்டதில் ஒருவர் பலி

11/10/2025 05:24 PM

பாங்கி, அக்டோபர் 11 (பெர்னாமா) -- இன்று அதிகாலை சிலாங்கூர், பாங்கி அருகே வடக்கு தெற்கு நெடுஞ்சாலை, கிலோமீட்டர் 293.4-கில் பேருந்து ஒன்று தடம் புரண்டு அடையாளப் பலகையில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.

மேலும் 18 பேர் காயமடைந்தனர்.

அச்சம்பவம் தொடர்பில், அதிகாலை மணி 2.57 அளவில் தமது தரப்பிற்கு அவசர அழைப்பு கிடைத்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை  செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் குறிப்பிட்டார்.

இவ்விபத்தில், 59 வயதான ஆடவர், பேருந்தில் சிக்கி உயிரிழந்ததை, சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இதனிடையே, காயமடைந்த 18 பேர், சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்றனர்.

பாங்கி, ஶ்ரீ கெம்பாஙான் மற்றும் கே.எல்.ஐ.ஏ-வின் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களைச் சேர்ந்த 18 உறுப்பினர்களுடன் தீயணைப்பு இயந்திரங்களும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)