ரியோ டி ஜெனிரோ, 06 ஜூலை (பெர்னாமா) - பிரிக்ஸ் தலைவர்களுடனான உச்சிநிலை மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்தியா மற்றும் எத்தியோப்பியாவைச் சேர்ந்த தமது சகாக்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மலேசிய நேரப்படி திங்கட்கிழமை நடைபெறும் இந்த உச்சநிலை மாநாட்டின் முக்கிய நிகழ்விற்குப் பின்னர் இச்சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சனிக்கிழமை பிரேசில் சென்றடைந்த அன்வார், பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டில் தமது தேசிய அறிக்கையை சமர்பித்தப் பின்னர் நவீன கலை அருங்காட்சியகத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.
கடந்தாண்டு லாவோசில் நடைபெற்ற 21-வது ஆசியான்-இந்தியா உச்சநிலை மாநாட்டில் அவ்விரு தலைவர்களும் சந்தித்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)