கோலாலம்பூர், டிசம்பர் 24 (பெர்னாமா) -- நாட்டின் நிதி நிர்வாகத்தின் முதன்மை தூணாக எஃப்.ஆர்.ஏ எனப்படும் 2023ஆம் ஆண்டு பொது நிதி மற்றும் நிதி பொறுப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டதன் மூலம் இவ்வாண்டு முழுவதும் அதன் செயல்திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இது வெறும் காகித கொள்கையாக மட்டுமல்லாமல் நாட்டின் நிதி கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களுக்கான உண்மையான வழிகாட்டியாகவும் விளங்குகின்றது.
அரசாங்கத்தின் நிதி நிர்வாகம் தொடர்ந்து வெளிப்படைத்தன்மையாக மாறுவதன் வழி இது நிரூபிக்கப்பட்டுள்ளதாக மலேசியாவில் உள்ள உலக வங்கியின் முதன்மை பொருளாதார நிபுணர் டாக்டர் அபுர்வா சங்ஹி கூறினார்.
கடன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கசிவைக் குறைக்கவும் அரசாங்கத்தின் ஆற்றலும் இதற்கு உறுதுணையாக இருப்பதோடு வெளி தரப்புகளிடமிருந்து தொடர் அங்கீகாரமும் கிடைப்பதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே உலகளாவிய நடைமுறை சூழலில் கொள்கை நிதி கட்டமைப்பிற்கு ஆதரவை நிரூபிக்கும் வலுவான சுய மேற்பார்வையின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையில் எஃப்.ஆர்.ஏவை ஒரு முக்கிய நடவடிக்கையாக உலக வங்கியும் பார்கின்றது.
"எனவே, இது இந்த மூன்று பகுதிகளின் கீழ் உள்ளது. உயர்ந்த இணக்கம் சிறந்த நிதி வழிமுறைகள் விலகல் இருக்கும்போது மிகவும் நம்பகமான திருத்த வழிமுறைகள் மற்றும் சிறந்த சுய மேற்பார்வை ஆகியவை நிதியை மேம்படுத்த உதவும். ஆனால், நான் எப்படி ஆரம்பித்தேனோ அப்படியே முடித்துக் கொள்கிறேன். அரசாங்கத்தின் நிதி சேவையில் அதிக சுய மேற்பார்வையைக் கொண்டிருப்பது என்ற பரந்த நோக்கத்தை இது பூர்த்தி செய்கிறது என்று நான் நினைக்கிறேன்" என்றார் டாக்டர் அபுர்வா சங்ஹி.
நிலையான நிதி நடைமுறைகளுக்கு இணங்க மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று விழுக்காட்டிற்கும் குறைவான நிதி பற்றாக்குறையை அடைவதே எஃப்.ஆர்.ஏவின் நீண்டகால இலக்காகும் என்று அவர் கூறினார்.
முன்னதாகல், 2023 எஃப்.ஆர்.ஏ அமலாக்கத்தின் மூலம் நிதிப் பிரச்சனைகளை மீட்டெடுப்பது வளர்ச்சி வாய்ப்பை அதிகரித்தல் makroekonomi எனப்படும் நுண்பொருளியல் மற்றும் நிதி நிலைத்தன்மையை பராமரித்தல் ஆகியவை முக்கிய சாதனையாக அமைந்ததாக அனைத்துலக நாணய நிதியம் ஐ.எம்.எஃப் குறிப்பிட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)