கோலாலம்பூர், 23 அக்டோபர் (பெர்னாமா) - இந்தியாவில் தீபாவளி பெருநாள் கொண்டாட்டம் இன்னும் நிறைவடையாத நிலையில், அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி 47- வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் இயங்கலை வாயிலாக பங்கேற்கவிருக்கிறார்.
நேற்றிரவு மோடியிடமிருந்து தமக்கு கிடைத்த அழைப்பில் இது குறித்து தெரிவிக்கப்பட்டதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வியூக அடிப்படையில் மற்றும் விரிவான மட்டத்திற்கு வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து தாமும் மோடியும் கலந்தாலோசித்திருந்ததாக, தமது முகநூல் பக்கத்தில் பிரதமர் கூறியிருந்தார்.
அதேவேளையில், 47-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் ரஷ்ய அதிபரான விளாமிடிர் புதினும் கலந்து கொள்ளவில்லை.
அவருக்கு பதிலாக அந்நாட்டின் துணைப் பிரதமர் அலெக்சான்டர் நோவாக் கலந்து கொள்வார் டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)