டெக்சஸ், 06 ஜூலை (பெர்னாமா) -- அமெரிக்கா, தெற்கு மத்திய டெக்சசில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 43-ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 15 பேர் சிறுவர்கள் என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
ஆற்றங்கரைகளில் முகாமிட்டிருந்த 27 சிறுமிகளை காணவில்லை என்று அதிகாரிகள் உறுதிபடுத்தியிருக்கும் வேளையில் அவர்களை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை 850 பேர் பாதுக்காப்பாக மீட்கப்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்திருக்கின்றனர்.
கெர் கவுண்டி எனும் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை காலை கனமழை பெய்ததால் அறிவிக்கப்பட்டதைவிட ஆற்றின் நீர்மட்டம் 29 அடி உயர்ந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]