பொது

மேம்பாலத்திலிருந்து சாலையில் விழுந்தது கொள்கலன் லாரி

19/08/2022 07:59 PM

ஈப்போ, 19 ஆகஸ்ட் (பெர்னாமா) -- வடக்கு - தெற்கு பிளஸ் நெடுஞ்சாலையில் பயணித்த கொள்கலன் லாரி ஒன்று, ஜாலான் கோலா கங்சார் மேம்பாலத்திலிருந்து கீழே சாலையில் விழுந்ததில், ஒருவர் காயமுற்றார்.

இன்று நண்பகல் 12.40 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் பினாங்கு, பட்டர்வெர்த்-தைச் சேர்ந்த 50 வயதுடைய லாரி ஓட்டுநர், சிராய்ப்பு காயங்களுடன் உயிர்ப் பிழைத்தார் என்று பேராக் மாநில இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ அஜிசி மாட் அரிஸ் தெரிவித்தார்.

அங்கு பணியில் ஈடுபட்டிருந்த நெஞ்சாலை ரோந்து போலீசார், இச்சம்பவம் குறித்து தமது தரப்புக்கு தகவல் வழங்கியதாக அவர் கூறினார்.

பிளஸ் நெடுஞ்சாலை வழியாக வடக்கு நோக்கிப் பயணித்த அந்த லாரி, 271.2-ஆவது கிலோமீட்டரில், ஜாலான் கோலா கங்சார் நோக்கிச் செல்லும் கூட்டரசு நெடுஞ்சாலையில் நுழைவதற்கு முன்னமே பாலத்திலிருந்து கீழே விழுந்ததாக தெரிய வருகிறது. 

சம்பந்தப்பட்ட லாரியில் ஏற்பட்ட பிரேக் பிரச்சனையே இவ்விபத்திற்கு காரணம் என்று அஜிசி கூறினார்

இதனிடையே, இவ்விபத்து குறித்து நண்பகல் 12.27 மணியளவில் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்குச் சென்றது லாரி ஓட்டுநர் தாமே சுயமாக லாரியிலிருந்து வெளியேறியதுடன் நெஞ்சு வலிப்பதாக கூறியதாகவும் ஈப்போ மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் படைத் தலைவர் முஹமட் அஸ்மான் ஹுசேன் தெரிவித்தார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)