Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

இணையப் பாதுகாப்பு: பேரரசியாரின் வலியுறுத்தலை ஆதரிக்கும் தொடர்பு அமைச்சு

16/02/2026 05:39 PM

ஜோகூர் பாரு, 16 பிப்ரவரி (பெர்னாமா) -- சிறார்கள் மற்றும் பதின்ம வயதினருக்கான இணையப் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் என்று பேரரசியார் ராஜா சரித் சோஃபியாவின் வலியுறுத்தலை தொடர்பு அமைச்சு ஆதரிக்கிறது.  

அவ்விவகாரத்திற்கு, அமைச்சு உட்பட தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்.சி.எம்.சி முன்னுரிமை அளிப்பதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃப்ஹமி ஃபட்சில் தெரிவித்தார். 

கடந்த ஜனவரி முதலாம் தேதிக்கு அமலுக்கு வந்த 2025-ஆம் ஆண்டு இணையப் பாதுகாப்புச் சட்டம், ONSA-வை புரிந்துகொள்ளுமாறு அனைத்து சமூக ஊடகத்தள நடத்துனர்களுக்கும் தமது தரப்பு தரப்பு அழைப்பு விடுத்துள்ளதாக டத்தோ ஃபஹ்மி கூறினார்.

''அவர்கள் விரைவில் மாற்றங்களையும் செய்ய வேண்டும். அதாவது, முதலில் 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் சமூக ஊடகக் கணக்குகளை வைத்திருப்பதையோ அல்லது திறப்பதையோ கட்டுப்படுத்த வேண்டும்,'' என்றார் அவர். 

இச்சட்டத்தின் மூலம் இணைய சூதாட்ட விளம்பரங்கள், மோசடிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு, ஏ.ஐ மூலம் உருவாக்கப்படும் போலி விவகாரங்களை சமூக ஊடகத்தள நடத்துனர்கள் தடுக்க வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார். 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]