Ad Banner
Ad Banner
 விளையாட்டு

பிரான்ஸ் பொது டென்னிஸ்; மீரா அன்ட்ரேயவா சாதனை

07/06/2026 03:11 PM

பாரிஸ், 07 ஜூன் (பெர்னாமா) --  பிரான்ஸ் பொது டென்னிஸ் போட்டியின் மகளிருக்கான இறுதி ஆட்டத்தில், ரஷ்யாவின் மீரா அன்ட்ரேயவா வெற்றி பெற்றுக் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மிக இளம் வயதில் பிரான்ஸ் அப்போட்டியின் கிண்ணத்தைத் தட்டிச் சென்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், மீரா அன்ட்ரேயவா போலந்தின் மாயா ஹலின்ஸ்காவுடன் அன்ட்ரேயவா விளையாடினார்.

இந்த ஆட்டத்தில் எந்தவொரு சிரமத்தையும் எதிர்கொள்ளாமல், 6-3 6-2 என்ற நேரடி செட்களில், ஹலின்ஸ்காவை அன்ட்ரேயவா தோற்கடித்தார்.

1992-ஆம் ஆண்டில் தமது 18-வது வயதில் மோனிகா செலஸ் இப்பட்டத்தை வென்ற பிறகு, ரோலண்ட் கரோஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்ற மிக இளம் வீராங்கனை என்ற பெருமையை 19 வயதான அன்ட்ரேயவா பெற்றுள்ளார்.

இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது தமது நீண்ட நாள் கனவு என்று, வெற்றிக் கிண்ணத்தைப் பெற்ற பின்னர் அன்ட்ரேயவா கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)