Ad Banner
Ad Banner
 பொது

மலாய் ஆட்சியாளர்களின் இறையாண்மையை மத்திய அரசாங்கம் பாதுகாக்கிறது

05/06/2026 05:04 PM

பூச்சோங், ஜூன் 05 (பெர்னாமா) -- நெகிரி செம்பிலானின் ஆட்சியாளர் துவாங்கு முரிஸ் துவாங்கு முனாவீர் நிலைப்பாட்டை மத்திய அரசாங்கம் தொடர்ந்து அங்கீகரித்து, இந்நாட்டில் மலாய் ஆட்சியாளர்களின் இறையாண்மையைப் பாதுகாக்கிறது.

நெகிரி செம்பிலான் அரசாங்க விவகாரங்களில் மத்திய அரசாங்கம் நேரடியாக ஈடுபடாவிட்டாலும், அரச நிறுவனத்தின் மாண்பு நிலைநிறுத்தப்பட்டும், ஒழுங்குமுறையின் மூலம் பேணப்பட வேண்டும் என்றும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.

''கூட்டரசு அரசாங்கமாகிய நாங்கள் நேரடியாக இதில் ஈடுபடாவிட்டாலும், குறிப்பாக மலாய்க்காரர்களுக்கும் மலேசியர்களுக்கும் அறிவுரை வழங்க வேண்டும். இந்த மன்னர் முறை என்பது பெயரளவில் மட்டுமல்ல, அதன் மாண்பு, பல்வேறு வழிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளிலும் அடங்கியுள்ளது. எனவே, மன்னரின் நிலை, மாண்பு மற்றும் இறையாண்மையை நாம் தொடர்ந்து நிலைநிறுத்த தற்போதைய நிலவரப்படி, நெகிரி செம்பிலானின் யாங் டிபெர்துவான், துவாங்கு முஹ்ரிசின் நிலையை அங்கீகரித்துத் தொடர்ந்து பணியாற்றுவோம்,'' என்றார் அவர்.

இன்று மலாக்காவில் உள்ள விடுதி ஒன்றில், Undang Yang Empat-னால் நெகிரி செம்பிலானின் 12 வது Yang Dipertuan Besar-ஆக Tunku Nadzaruddin Tuanku Ja’afar நியமிக்கப்படுவார் என ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் செய்திகள் குறித்து பிரதமர் அவ்வாறு கருத்துரைத்தார்.

- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)