Ad Banner
Ad Banner
 விளையாட்டு

தேசிய ஆடவர் இரட்டையர் பிரிவில் புதிய ஜோடிகள்; சொங் வெய் வரவேற்பு

06/06/2026 06:23 PM

கோலாலம்பூர், 06 ஜூன் (பெர்னாமா) --  2028-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டங்களை எதிர்கொள்ளும் வகையில், தேசிய ஆடவர் இரட்டையர் பிரிவில் புதிய ஜோடிகளைப் பரிசோதிக்கும் மலேசிய பூப்பந்து சங்கம் பி.ஏ.எம்-இன் முயற்சி ஒரு சரியான நடவடிக்கை.

ஒலிம்பிக் போட்டியில் மலேசியா முதல் தங்கப் பதக்கத்தை வெல்லும் நோக்கில், பி.ஏ.எம்-இன் இந்நடவடிக்கைக்கு அதன் செயல்திறன் செயற்குழுத் தலைவர் டத்தோ லீ சொங் வெய் முழு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டி முடிவடைந்த பிறகு, அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கான சிறந்த இணையைக் கண்டறியும் பொருட்டு,  பூப்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கும் உலகின் பல நாடுகள் புதிய ஜோடிகளை உருவாக்க முயற்சி செய்யத் தொடங்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

பி.ஏ.எம்-இன் இந்தப் புதிய கூட்டணி நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தினால், 2028-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டியில் அவர்கள் விளையாடுவதற்கான சாத்தியத்தையும் சொங் வெய் நிராகரிக்கவில்லை.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)

 KEYWORDS
 தொடர்புடைய செய்திகள்
 பரிந்துரை