Ad Banner
Ad Banner
 பொது

ஜோகூர் & நெகிரி செம்பிலான் தேர்தல்களை எதிர்கொள்ள கேந்திரங்களைத் தயார்படுத்துகிறது நம்பிக்கைக் கூட்டணி

05/06/2026 05:02 PM

பூச்சோங், ஜூன் 05 (பெர்னாமா) -- ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களை எதிர்கொள்ள நம்பிக்கைக் கூட்டணி தற்போது தனது கேந்திரங்களைத் தயார்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அவ்விரு மாநிலங்களின் சட்டமன்றங்கள் கலைக்கப்படுவதற்கான அறிவிப்பு குறுகிய காலத்திற்குள் வெளியிடப்பட்டதால், கேந்திரங்களைத் தயார்படுத்தும் அனைத்து அம்சங்களும் தகுந்த முறையில் முன்னெடுக்கப்படும் என்று நம்பிக்கைக் கூட்டணி தலைவருமான பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

''நேற்றைய அறிக்கையின்படி, ஜோகூருக்கு இது குறுகிய கால அவகாசமாக இருந்தபோதிலும், நாங்கள் எங்களால் முடிந்தவரை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம். அந்த நேரத்தில், அரசாங்கத் தலைமைத்துவதிலுள்ள எனது நண்பர்களிடம் பொருளாதாரம் மற்றும் மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்துமாறு நான் கேட்டுக்கொண்டேன். மீண்டுவர இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குக் கவனம் செலுத்த நமக்கு நேரம் இருக்கிறது. அதன் பிறகு தேர்தல். ஆனால் ஜோகூர் அதை விரைவில் விரும்புகிறது, நாம் அதை எதிர்கொண்டே ஆக வேண்டும்,'' என்றார் அவர்.

சிலாங்கூர், பூச்சோங்கில் உள்ள மெராந்தி பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் சந்தித்தபோது கெஅடிலான் கட்சி தலைவருமான டத்தோ ஶ்ரீ அன்வார், நேற்று நடைபெற்ற அக்கட்சியின் அரசியல் செயற்குழுக் கூட்டத்தின் முக்கிய விவாதப் பொருள், இரு மாநிலங்களின் தேர்தல் வளர்ச்சி குறித்ததே என்றும் கூறினார்.

- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)