Ad Banner
Ad Banner
 விளையாட்டு

ஆர்சனலை வீழ்த்தியதன் வழி பிஎஸ்ஜி தனது வெற்றியாளர் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டது

31/05/2026 06:22 PM

ஹங்கேரி, 31 மே (பெர்னாமா) -- ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ணத்தை பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன், பி.எஸ்.ஜி தக்கவைத்துக் கொண்டது.

இன்று அதிகாலை  நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஆர்சனலுடன் மோதிய பி.எஸ்.ஜி  1-1 என்று சமநிலை கண்டது.

அதனைத் தொடர்ந்து ஆட்டம் பினால்டி வரை நீடித்ததால், 4-3 என்ற கோல்கள் எண்ணிக்கையில் ஆர்சனலை தோற்கடித்து பி.எஸ்.ஜி இவ்வாண்டும் கிண்ணத்தைத் தட்டிச் சென்றது.

ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் முதல் கோலை அடித்து ஆர்சனல் முன்னணி வகித்தது.

அதன் பின்னர் ஆட்டத்தைச் சமப்படுத்த பி.எஸ்.ஜி மேற்கொண்ட முயற்சிகள் இரண்டாவது பாதி ஆட்டத்தின் 64-வது நிமிடத்தில் நிறைவேறியது.

ஆட்டம் 1-1 என்று நிறைவடைந்ததால், வெற்றியாளரை நிர்ணயிக்க பினால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.

தனக்குக் கிடைத்த பினால்டி வாய்ப்பை ஆர்சனல் தவறவிட்டதால், வெற்றியாளர் பட்டத்தை முதல் முறையாக வெல்வதற்கான தனது நீண்ட கால காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவர  அக்கிளப் தோல்வி கண்டது.

இந்த வெற்றியின் மூலம், ரியல் மாட்ரிட்டிற்குப் பிறகு 'ஐரோப்பிய காற்பந்தின் ராஜா' என்ற பட்டத்தை வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்ட இரண்டாவது அணியாக பி.எஸ்.ஜி  சாதனை படைத்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)