கோலாலம்பூர், 29 ஜூன் (பெர்னாமா) -- மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹமான் விடுதலைச் செய்யப்பட்டது நிலைநிறுத்தப்படுமா அல்லது சிறைத் தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்படுமா என்பது நாளை தெரியவரும்.
நம்பிக்கை மோசடி, சொத்துகளை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவு, அர்மாடாவின் நிதி சம்பந்தப்பட்ட கள்ளப்பண பரிமாற்றம் ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பான மேல்முறையீட்டின் இறுதி தீர்ப்பில் அது முடிவு செய்யப்படும்.
மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் தலைமையில்,கூட்டரசு நீதிமன்றம் நீதிபதிகள் குழு அவரின் விடுதலைக்கு எதிராக அரசுத் தரப்பு தாக்கல் செய்த இறுதி மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு, காலை மணி 9-க்கு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை இரண்டு நாள்கள் நடைபெற்ற நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி, மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவின் முன்னிலையில் இரு தரப்பினரும் தங்களது வாதங்களை நிறைவு செய்தனர்.
-பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)