லண்டன் , 23 மே (பெர்னாமா) -- இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணம் பரபரப்பான உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
அடுத்த பருவத்தில் முதல் பிரிவிலேயே நீடிப்பதை உறுதி செய்வதற்கான போட்டிகள் வலுக்கும் நிலையில், Tottenham மற்றும் Everton கிளப்கள் தங்களுக்கு எதிரான தோல்வியை தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
மேலும், உலகப் புகழ்பெற்ற நட்சத்திரங்களான லிவர்பூலின் முஹமட் சாலா மற்றும் பெப் கார்டியோலா உள்ளிட்ட பலர் தற்போதைய கிளப்களில் கடைசி தருணங்களை எதிர்கொண்டுள்ளதால், இப்பருவத்தின் நிறைவு உணர்ச்சிகரமாக மாறியுள்ளது.
பருவம் முழுவதும் சீரற்ற ஆட்டத்தினால் ஒரு கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கும் டோட்டன்ஹம் முதல் பிரிவில் நீடிப்பதற்கு ஒரு புள்ளி மட்டுமே தேவைப்படுகிறது.
ஆனால், வரும் ஆட்டத்தில் ஒரு தோல்வி ஏற்பட்டால்கூட, எதிரணிகள் அதனை முந்திச் செல்வதற்கான வாய்ப்பை அது ஏற்படுத்திவிடும்.
இதனிடையே, லிவர்பூல் அரங்கில் சாலா தமது இறுதி ஆட்டத்தை விளையாட உள்ளார்.
முன்னணி தாக்குதல் வீரரான அவர், அணியின் அண்மைய செயல்பாடுகளை விமர்சித்ததுடன், லிவர்பூல் மீண்டும் தாக்குதல் பாணியிலான ஆட்டத்திற்குத் திரும்ப வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்
அதேபோல, சுமார் 10 ஆண்டு காலமாக மான்சிஸ்டர் சிட்டியை வழிநடத்தி, 20 முக்கிய கிண்ணங்களை வென்ற பிறகு அதன் நிர்வாகி பெப் கார்டியோலா அந்த கிளப்பில் இருந்து விடைபெறுவதாக கூறப்படுகிறது.
மேலும், ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண போட்டியில் களமிறங்கும் தகுதியை பெறுவதில், செல்சி. பிரைட்டன், அல்பியோன், போன்மெளத் ஆகிய நான்கு முக்கிய கிளப்கள் கடுமையான போராட்டத்தையும் காணவிருப்பதால், இப்பருவத்தின் நிறைவு பரபரப்பும் பதற்றமும் நிறைந்த ஒன்றாக மாறியுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)