கோலாலம்பூர் , 23 மே (பெர்னாமா) -- பள்ளி விடுமுறை மற்றும் தியாகத் திருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, முக்கிய நெடுஞ்சாலைகளிள் இன்று நள்ளிரவு வரையில் போக்குவரத்து நெரிசல் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்கு நோக்கி செல்லும் முக்கிய சாலைகளில் வாகனங்கள் அதிகரித்துள்ளதால், போக்குவரத்து நெரிசல் மோசமடைந்து வருகிறது.
சனிக்கிழமை காலையுடன் ஒப்பிடும்போது, பிற்பகலில் டோல் சாவடியை நோக்கிச் செல்லும் நுழைவுப் பாதைகளில் அதிக நெரிசலாக இருந்தது, பெர்னாமா தொலைக்காட்சி மேற்கொண்ட கண்ணோட்டத்தில் தெரியவந்தது.
நகர மையம் மற்றும் பிற முக்கிய நெடுஞ்சாலைகளில் இருந்து வரும் வாகனப் போக்குவரத்துகள், குறிப்பிட்ட அந்த வழித்தடங்களை நோக்கி நகர்வதே அதற்குக் காரணமாகும்.
தலைநகரை நாட்டின் தெற்கு மற்றும் வடக்கு மாநிலங்களை இணைக்கும் முக்கிய வழித்தடங்களில் Sungai Besi டோல் சாவடியும் ஒன்றாகும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)