Ad Banner
Ad Banner
 பொது

காராக் நெடுஞ்சாலையில் சாலை விபத்து; மூவர் பலி

22/05/2026 04:36 PM

காராக், 22 மே (பெர்னாமா) -- காராக் நெடுஞ்சாலையில் இருந்து கோலாலம்பூரை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த கார் ஒன்று சிமென்ட் லாரியின் பின்புறத்தில் மோதியதில் அக்காரில் பயணித்த மூன்று ஆடவர்கள் உயிரிழந்தனர்.

மேலும், பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

வெள்ளிக்கிழமை பின்னிரவு, காராக் நெடுஞ்சாலையின் 34-வது கிலோமீட்டர் கம்போங் சுங்கை சின்சின் அருகே இவ்விபத்து நிகழந்தது.

இவ்விபத்து குறித்து பின்னிரவு மணி 2.07-க்கு தகவல் கிடைத்ததாக, சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு துறை செயல்பாட்டு பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் கூறினார்.

பின்னிரவு மணி 2.35 அளவில், சம்பவ இடத்திற்கு சென்றடைந்தவுடன் காரில் நால்வர் சிக்கியிருந்ததை தமது அதிகாரிகள்  கண்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.

மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை சுகாதார அமைச்சின் மருத்துவ அதிகாரி உறுதி செய்தார்.

அதேவேளையில், 27 வயதான பெண் ஒருவருக்கு தலையில் பலத்த காயங்களும், இடது காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டது.

உயிரிழந்தவர்களின் நல்லுடல்கள் போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அந்தப் பெண் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]