Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

இரு சிறார்களுக்கு பாலியல் வன்கொடுமை;  சிறார்கள் இல்லப் பராமரிப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

21/05/2026 06:42 PM

கோலாலம்பூர், மே 21 (பெர்னாமா) -- இவ்வாண்டு தொடக்கத்தில், இரண்டு சிறார்கள் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் இயற்கைக்கு புறம்பான பாலியல் உறவில் ஈடுபட்டதாக ஆறு குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்ட சிறார்கள் இல்லப் பராமரிப்பாளர் ஒருவருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஐந்து பிரம்படிகளும் விதித்து அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றம், இன்று தீர்ப்பளித்தது.  

25 வயதான ரத்னாவேலுவுக்கு எதிரான ஒவ்வொரு குற்றச்சாட்டுகளுக்கும் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி கைது செய்யப்பட்ட நாளிலிருந்து அவை ஏக காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நீதிபதி நோர்ஷீலா கமாருடின் உத்தரவிட்டார்.

முதல் ஐந்து குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றிற்கும்  ரத்னாவேலுவுக்கு  ஒரு பிரம்படி வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

எனினும், 2017-ஆம் ஆண்டு சிறார்கள் பாலியல் குற்றங்கள் சட்டம் செக்‌ஷன் 15(a)-வின் கீழ் உள்ள குற்றங்களுக்கு பிரம்படி விதிக்கப்படாது.   

அதோடு, குற்றம் சாட்டப்பட்டவர் தனது சிறைத் தண்டனை காலம் முழுவதும் உளவியல் ஆலோசனையில் பங்கேற்க வேண்டும் என்றும், தண்டனையை நிறைவேற்றியப் பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு போலீசாரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் Norshila உத்தரவிட்டார்.   

இதனிடையே, பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவன் தற்போது மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அந்நியர்கள் குறிப்பாக, ஆண்களைக் கண்டு அஞ்சுவதோடு தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து அடிக்கடி பகிர்வதாகவும் பாதிக்கப்பட்டவரின் உறவினர் ஒருவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)