Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

இங்கிலாந்து எப்.ஏ கிண்ணத்தை கைப்பற்றியது சிட்டி

17/05/2026 07:22 PM

இங்கிலாந்து, மே 17 (பெர்னாமா) -- இங்கிலாந்து எப்.ஏ கிண்ண காற்பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி வாகை சூடியது.

நேற்றிரவு, செல்சியுன் நடைபெற்ற பலம் பொருந்திய இறுதி ஆட்டத்தின், இரண்டாம் பாதியில், மான்செஸ்டர் சிட்டி தனது ஒரே வெற்றி கோலைப் போட்டு கிண்ணத்தைக் கைப்பற்றியது.

அதிரடி நிறைந்த இந்த சிறப்பான இறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தின.

அதனால் முதல் பாதிவரை மான்செஸ்டர் சிட்டியும் செல்சியும் கோல் அடிக்க முடியாமல் போனது.

இந்நிலையில், இரண்டாம் பாதி ஆட்டத்தின் 71-வது நிமிடத்தில் Antoine Semenyo அடித்த அபாரமான கோல், சிட்டியை 1-0 என்ற கோலில் வெற்றி பெறச் செய்தது.

இந்த வெற்றியின் வழி, உள்நாட்டுப் போட்டிகளில் மும்முறை கிண்ணத்தை வெல்லும் தங்களது நம்பிக்கையை சிட்டி தக்கவைத்துக் கொண்டது.

மான்செஸ்டர் சிட்டியின் கவனம் இப்போது பிரிமியர் லீக் பக்கம் திரும்பியுள்ளதால், வரும் செவ்வாய்க்கிழமை அவர்கள் Bournemouth-தைச் சந்திக்கின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)