Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

ETCON 26: எரிசக்தி அமைப்புகளை நிர்வகிப்பதில் ஏ.ஐ முக்கிய பங்காற்றுகிறது

18/05/2026 06:22 PM

கோலாலம்பூர், 17 மே (பெர்னாமா) --  சிக்கலான மின்சார அமைப்புகளும் அதன் தேவைகளும் அதிகரித்து வரும் வேளையில், எரிசக்தி அமைப்புகளை நிர்வகிப்பதில் செயற்கை நுண்ணறிவு ஏ.ஐ முக்கிய பங்காற்றுகிறது.

இந்நிலையில், அதற்கான மகத்தான யோசனைகளையும் நடைமுறை செயல்பாடுகளையும் எடுத்துணர்த்தும் வகையில், ETCON 2026 எனப்படும் எரிசக்தி மாற்ற மாநாடு நடைபெறுகிறது.

மின்கட்டமைப்பின் செயல்திறனை உயர்த்தவும், மின் விநியோக வழங்கல் நம்பகத்தன்மையை மேம்படுத்தவும், மேலும் சூரிய சக்தி மற்றும் மின்சார வாகனங்கள் ஈ.வி போன்ற பசுமை தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை ஆதரிக்கவும் ஏ.ஐ ஒரு முக்கிய கருவியாகியுள்ளதாக TENAGA NASIONAL நிறுவனம், TNB தலைமை இலக்கவியல் மற்றும் தகவல் அதிகாரியுமான அஸ்லான் அஹ்மட் தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டு தேசிய எரிசக்தி மாற்றத்திற்கான செயல்திட்டம் தொடங்கப்பட்டது முதல் ஆரம்பிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க முயற்சிகளின் தொடர்ச்சியாக ETCON26 நடைபெறுவதாக அஸ்லான் அஹ்மட் தெரிவித்தார்.

''ETCON26 அஸ்ரி, மூன்று முக்கியத் தூண்களில் கவனம் செலுத்துகிறது. (2:06) முதலாவதாக, ஏ.ஐக்கான ஆற்றல், அதாவது தூய்மையான எரிசக்தி நமது இலக்கவியல் உலகத்தை ஆதரிப்பதை உறுதி செய்வது ஏ.ஐ. இரண்டாவதாக, மின்சார விநியோக அமைப்பை மேலும் திறமையானதாகவும் நம்பகமானதாகவும் மாற்றுவது. இறுதியாக, மக்களுக்கான எரிசக்தி மாற்றம், அதாவது மூன்றாவது, எரிசக்தி மாற்றத்தின் நன்மைகள் அனைவரையும் உள்ளடக்கியதாக இருப்பதையும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும் உறுதி செய்வது. இதனால்தான் ETECON26 இப்போது மிகவும் முக்கியமானது, இந்தத் தருணத்தில் மிகவும் பொருத்தமானது. நீங்கள் ஒரு தொழில் துறைத் தலைவராகவோ, தொழில்நுட்பப் புதுமையாளராகவோ அல்லது மாணவராகவோ இருந்தாலும், இது பெரிய யோசனைகள் நிஜ உலகச் செயல்களைச் சந்திக்கும் இடமாகும்'', என்றார் அவர்.

ETCON26 மாநாடு தொழில்துறைப் பங்காளர்களுக்கு ஏ.ஐ-க்குத் தயாரான மின்கட்டமைப்பு மேம்பாட்டைச் செயல்பாட்டில் காணவும், ஆசியான் எரிசக்திப் போக்கை வடிவமைப்பதில் மலேசியாவின் பங்கைப் புரிந்துகொள்ளவும் ஒரு வாய்ப்பை வழங்கும் என்றார் அவர்.

''மிகவும் எளிமையாகச் சொல்வதானால், ஆற்றலுக்கான ஏ.ஐ என்பது நமது மின் கட்டமைப்புக்கு ஒரு மூளையையும், கண்களையும் கொடுப்பதாகும். பாரம்பரிய மின் விநியோக அமைப்பு என்பது, ஓட்டுநர் ஒவ்வொரு முடிவையும் எடுக்க வேண்டியதும், ஒவ்வொரு கியரையும் மாற்ற வேண்டியதும், ஒவ்வொரு அளவீட்டுக் கருவியையும் கவனிக்க வேண்டியதுமான ஒரு காரை ஓட்டுவதைப் போன்றது. இருப்பினும், இன்றைய மின் அமைப்பு மிகவும் சிக்கலானதாகிவிட்டது; ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சூரிய மின் தகடுகள், மின்சார வாகன மின்னூட்டிகள் போன்றவை மின் கட்டமைப்புடன் இணைக்கப்படுகின்றன. அது, இந்த அமைப்பைத் திறமையாக நிர்வகிப்பதை மனிதர்களுக்கு மேலும் மேலும் சவாலானதாக ஆக்குகிறது. எனவே, உதாரணமாக, முன்கூட்டியே கணிக்கக்கூடிய ஓர் இலக்கவியல் மூளையாகச் செயல்பட நாம் ஏ.ஐயைப் பயன்படுத்துகிறோம்'', என்று அவர் கூறினார்.

TNB நிறுவனத்தில் செயல்பாடுகள் முழுவதிலும் ஏ.ஐ தொழில்நுட்பங்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருவதை குறிப்பிட்ட அவர், அதன் வழி சொத்து நிர்வாக திறன் மேம்படுத்துவதோடு, முன்கூட்டியே கணித்து தடுக்கும் வழிமுறைக்குகும் அது உதவுவதாக அஸ்லான் அஹ்மட் கூறினார்.

''நிச்சயமாக, டிஎன்பி-யில் இது ஒன்றும் புதிதல்ல. ஏ.ஐ என்பது இனி வெறும் கருத்தாக்கம் மட்டுமல்ல. அது ஏற்கனவே களத்தில் உண்மையான செயல்பாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மின்கட்டமைப்பு அமைப்பைப் பொறுத்தவரை, எங்களின் ஏ.ஐ மூலம், தடங்கல்கள் ஏற்படுவதற்கு முன்பே அவற்றை நாங்கள் கண்டறிந்து தடுக்கிறோம். விநியோக வலையமைப்பில், நிலத்தடி மின்கம்பிகள் முன்கணிப்புப் பராமரிப்பு மூலம் ஏ.ஐ பயன்படுத்தப்படுகிறது. இது, கண்ணுக்குத் தெரியாத கோளாறுகளின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிவதை உள்ளடக்கியது. இதன் மூலம் ஒரு தடங்கல் ஏற்படுவதற்கு முன்பே நடவடிக்கைகளை எடுக்க அனுமதிக்கிறது. மீண்டும், முன்கணிப்புத் திறன்கள். களத்தில், காட்சிவழி அறிவார்ந்த உதவியின் மூலம்ஏ.ஐ, மின்கம்பி இணைப்புப் பணியின் தரத்தையும், களத்தில் உள்ள தர அம்சத்தையும் மதிப்பிட எங்களுக்கு உதவுகிறது, இதன்மூலம் ஏற்படக்கூடிய குறைபாடுகளைக் குறைக்கிறது'', என்று அவர் தெரிவித்தார்.

சிறப்புச் சலுகையைப் பெற்றுக் கொள்ள ETCON26BERNAMA எனும் குறியீட்டைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் பதிந்து கொள்வதற்கு மக்கல் www.the-etconference.com எனும் அகப்பக்கத்தை நாடலாம்.

2026-ஆம் ஆண்டு எரிசக்தி மாற்ற மாநாடு, ஜூன் 3 முதல் 5 வரை கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளதாக பெர்னாமா தொலைக்காட்சிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அஸ்லான் அஹ்மட் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)