காங்கோ, மே 17 (பெர்னாமா) -- காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவில் பரவியுள்ள இபோலா நோய்த்தொற்றை அனைத்துலக பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் WHO அறிவித்துள்ளது.
ஆயினும், Bundibugyo கிருமியால் ஏற்படும் இபோலா நோய் இன்னும் பெருந்தொற்று நிலையை எட்டவில்லை என்று, WHO தலைமை இயக்குநர் Tedros Adhanom Ghebreyesus தெரிவித்தார்.
அண்டை நாடுகளின் தயார்நிலையை அதிகரிப்பதையும் அனைத்துலக சமூகத்தின் ஆதரவைத் திரட்டுவதையும் இப்பிரகடனம் நோக்கமாகக் கொண்டது என்று WHO கூறியது.
சனிக்கிழமை நிலவரப்படி, எட்டு இபோலா நோய்த்தொற்று சம்பவங்கள் ஆய்வுக்கூடத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளன.
அதில், காங்கோ, Ituri மாகாணத்தில் குறைந்தது மூன்று சுகாதார மண்டலங்களை உட்படுத்தி 246 பாதிப்புகளும் 80 மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதோடு, காங்கோவிலிருந்து பயணம் செய்த நபர்களுக்கு, உகாண்டா, Kampala-வில் மே 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் 24 மணி நேரத்திற்குள், ஒரு மரணம் உட்பட உறுதிபடுத்தப்பட்ட இரு இபோலா நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
எனினும், இரு வழக்குகளுக்கும் தொடர்பில்லை என நம்பப்படுவதாக WHO தெரிவித்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)