Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

எரிபொருளின் விலை உயர்வு; இந்தோனேசிய மீனவர்கள் கடும் அவதி

13/05/2026 04:05 PM

நௌரங் , மே 13 (பெர்னாமா) -- மேற்கு ஆசியாவில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியால், இந்தோனேசியா மத்திய ஜாவாவில் உள்ள மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

உலக அளவில் எரிபொருளின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளதால், படகுகள் மற்றும் மீன்பிடி கப்பல்களை பயன்படுத்துவதற்கு அவர்கள் கடும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

தாய்லாந்து, சீனா மற்றும் ஜப்பான் போன்ற சந்தைகளுக்கு தரம் வாய்ந்த மீன்களை ஏற்றுமதி செய்வதற்காக, பப்புவா கடற்பகுதி உட்பட இந்தோனேசியாவின் கிழக்குக் கடற்பரப்பில் பல படகுகள் எட்டு முதல் ஒன்பது மாதங்கள் வரை செலவிடுகின்றன.

அதிக நேரம் கடற்பரப்பில் செலவிடப்படுவதால், டீசலின் தேவை அதிகமாக இருக்கும்.

ஆனால் தற்போதைய சூழலினால் அந்த எரிபொருளுக்கான விலை அதிகரித்துள்ளதால், பல இன்னல்களை சந்தித்து வருவதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

“விலை உயர்வுகள் சுமார் மூன்று முறை ஏற்பட்ட. முதலாவது நோன்பு பெருநாளுக்குப் பிறகு, அதன் விலை சுமார் 14,000 ரூபியாவாக உயர்ந்தது; பின்னர் மீண்டும் சுமார் 18,000 ரூபியாவாக அதிகரித்தது. தற்போதைய தகவல்களின்படி, அதன் விலை சுமார் 27,000 முதல் 30,000 ரூபியா வரை உள்ளது,“ என்றார் அகிக் ஃபாலிஹ் அல் ஆரிஃப் எனும் மீனவர்.
SUPER: அகிக் ஃபாலிஹ் அல் ஆரிஃப் / மீனவர்

“இதன் விளைவாக மீனவர்களால் கடலுக்குச் செல்ல முடியவில்லை. ஜுவானாவில் உள்ள சுமார் 1,680 படகுகளில், மார்ச் மாதத்தில் சுமார் 79 படகுகளும், ஏப்ரல் மாதத்தில் சுமார் 425 படகுகளும் மட்டுமே இயங்கின,“ என்றார் எகோ புடியானோ.

அதிபர் பிரபோவோ தலைமையிலான அரசாங்கம், மீனவர்களுக்கு உதவக்கூடிய திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)